Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கண்றாவி சுறா.. விஜய் அப்போதே சொன்னார்! நஷ்டம் பற்றி தயாரிப்பாளர் ஓபன் டாக்

நடிகர் விஜய்யின் கேரியரில் மிகப்பெரிய பிளாப் ஆன படம் சுறா. அதை பற்றி இப்போதும் சமூக வலைத்தளங்களில் பல விமர்சனங்கள் வருவதுண்டு.

இந்த படத்தினை தயாரித்த நடிகர் சங்கிலி முருகன் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் விஜய் அப்போதே இயக்குனரை மாற்றலாமா என கேட்டார் என கூறியுள்ளார். ஷூட்டிங் சமயத்திலேயே விஜய்க்கு திருப்தியில்லாததால் தான் அவர் அப்படி கூறியுள்ளார்.

மேலும் எவ்வளவு நஷ்டம் என்பது பற்றி கேட்டதற்கு, "படத்தினை சன் டிவிக்கு விற்றுவிட்டேன். முதலில் வருத்தப்பட்டார்கள். ஆனால் தற்போது அந்த பணம் recover ஆகியிருக்கும்" என அவர் கூறியுள்ளார்.