Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கேஜிஎப் இரண்டாம் பாகத்தில் மாற்றம்! யாஷ் கூறிய தகவல் - ரசிகர்கள் குஷி

நடிகர் யாஷ் நடித்திருந்த கேஜிஎப் படம் இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அதனால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த படம் பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில் இரண்டாம் பாகத்தில் சில மாற்றங்களை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். முதல் பாகத்திற்கு வந்த விமர்சனங்கள், மற்ற மொழிகளில் டப்பிங் செய்தபோது வந்த பிரச்சனைகள் ஆகியவற்றை மனதில் கொண்டு தான் சில மாற்றங்கள் செய்துள்ளார்கலாம்.

மேலும் கேஜிஎப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகம் இருப்பதால் ரசிகர்களை திருப்திப்படுத்தும் அளவுக்கு பட்ஜெட் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.