Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மன்னிப்பு கேட்ட நயன்தாரா! பிரபல நடிகரின் படத்திற்கு வந்த சோதனை - இப்படியா செய்வது

விஜய் 63 படத்தில் நடித்து வரும் நடிகை நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் டாப் லிஸ்ட் நடிகை. லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் கொண்டாடும் இவரின் கால்ஷுட்டுக்காக பலரும் காத்திருக்கிறார்கள்.

விஸ்வாசம் படத்தை அடுத்து இவரின் நடிப்பில் வந்த ஐரா படம் பெரிதளவில் வெற்றியடைவில்லை. அடுத்ததாக அவருக்கு கொலையுதிர்காலம் படம் வெளியாகவுள்ளது.

தெலுங்கில் படங்களிலும் நடித்து வரும் அவர் மலையாளத்தில் லவ் ஆக்‌ஷன் டிராமா படத்தில் நிவின் பாலியுடன் நடித்து வருகிறார். தயன் சீனிவாசன் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முக்கால் வாசி முடிந்துவிட்டதாம்.

ஆனால் இன்னும் 20 நாட்களுக்கான படப்பிடிப்பு மட்டுமே மீதம் இருக்கிறதாம். இந்த படத்திற்காக நயன்தாரா கொடுத்த தேதிகளில் மாற்றம் செய்துவிட்டு ரஜினி, விஜய் படங்களுக்காக கால்ஷீட் கொடுத்துவிட்டாராம்.

இதனால் இந்த கோடை விடுமுறைக்கு வரவேண்டிய அந்த படம் தள்ளிப்போக வேண்டியுள்ளது. இதற்காக நடிகர், இயக்குனர், தயாரிப்பாளரிடம் நயன்தாரா மன்னிப்பு கேட்டதோடு சில நாட்களில் வந்து கலந்துகொள்கிறேன் என கூறியுள்ளாராம்.

இதனால் இப்படம் ஓணம் பண்டிகைக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.