Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தேர்தலில் தோல்வியடைந்த நடிகர் பிரகாஷ் ராஜ் எடுத்த அதிரடி முடிவு!

நடிகர் பிரகாஷ் ராஜ் நடந்த முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகாவின் பெங்களூர் மத்திய தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார். நீண்ட நாட்களாக அரசியல் விமர்சனங்கள் செய்து வந்த அவர் இந்த நிலையால் தற்போது தனி கட்சி தொடங்க அதிரடியாக முடிவு எடுத்துள்ளார்.

இதில் அவர் பெங்களூரு முழுக்க கடந்த 6 மாத காலமாக மக்களை சந்தித்து பிரச்சனைகளை கேட்டு தெரிந்துகொண்டேன். அதற்கு தீர்வு காண குரல் கொடுத்தேன்.

தேர்தலில் மக்களின் முடிவை ஏற்கிறேன். எனது கொள்கைகள் நிறைவேற தொடர்ந்து உழைப்பேன். சுயேட்சையாக நின்றதால் மக்களுடன் இடைவெளி ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

இதனால் தான் தனி கட்சி முடிவு எடுத்துள்ளேன். இன்னும் ஒரு வருடத்தில் பெங்களூரில் மாநகராட்சி தேர்தல் நடக்கவுள்ளது. அதில் எங்கள் கட்சி வேட்பாளர்கள் போய்யிடுவார்கள். கட்சி நடத்த பணம் தேவை என்பதால் தொடர்ந்து படங்களில் நடிக்க போகிறேன் என கூறியுள்ளார்.