Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் பெயர் தான் எனக்கு வேணும்! கேட்டு வாங்கிய பிரபல நடிகர் - ரகசியம் இதுதானாம்

விஜய் ரசிகர்கள் தளபதி 63 படத்தின் அப்டேட்டிற்காக காத்திருக்கும் நேரம் இது. அட்லீ இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் வேகமாக எடுக்கப்பட்டு வருகிறது.

விஜய்யை சினிமா பிரபலங்களுக்கும் மிகவும் பிடிக்கும். அவரும் பலரின் வாழ்க்கையில் வழி காட்டியிருக்கிறார். அப்படியான இரு அனுபவத்தை பெற்றவர் தான் நடிகர் ஜெய்.

பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்து, விஜய்யின் அறிவுரைகளை கேட்டு ஹீரோவாக இன்று முக்கிய இடம் பிடித்துள்ளார். எங்கேயும் எப்போதும், ராஜா ராணி என அவரின் முக்கிய படங்கள் பெரிதும் பேசப்பட்டன.

தற்போது பிரேக்கிங் நியூஸ், லவ் மேட்டர் என படங்களில் நடித்து வருகிறார். லவ் மேட்டர் படத்தை விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி வருகிறார்.

ஜெய்க்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா, அதுல்யா ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தில் கார்த்தி என்ற கேரக்டரை ஜெய்க்கு இயக்குனர் கொடுத்திருக்கிறாராம்.

ஆனால் ஜெய் என விஜய் என்ற பெயர் தான் வேண்டும் என கூறியுள்ளார்.

விஜயகாந்த் விஜய்யை வைத்து இயக்கி, வெற்றி பெற்ற படங்களில் ஹீரோக்களின் பெயர் விஜய் தான். அதனால் தான் ஜெய்யும் இந்த பெயரை விரும்புகிறாராம்.