Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கடைசி நேரத்தில் ரிலீஸுக்கு தடை! முக்கிய ஆதாரத்தை வெளியிட்ட நயன்தாரா பட தயாரிப்பாளர்

நடிகை நயன்தாரா சோலோ ஹீரோயினாக நடித்துள்ள படம் கொலையுதிர் காலம். இந்த படம் நீண்ட தாமதத்திற்கு பிறகு இந்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கொலையுதிர்காலம் தலைப்பு என்னுடையது என கூறி பாலாஜி குமார் (விடியும் முன் இயக்குனர்) நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இந்த படத்தின் ரிலீசுக்கு இடைக்கால தடை வாங்கியுள்ளார்.

இதனால் நயன்தாரா படம் ரிலீஸ் ஆகுமா என்கிற கேள்விக்குறி எழுந்தது. இந்நிலையில் தற்போது கொலையுதிர் காலம் பட தயாரிப்பாளர் ஒரு ஆதாரத்தை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் தலைப்பை பதிவு செய்ததற்கான ஆதாரத்தை நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதை நீதிமன்றத்தில் சமர்பிக்கவுள்ளனர். அவர்கள் தடையை நீக்கினால், வரும் வெள்ளிக்கிழமை படம் வெளியாகும்.