Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நயன்தாராவின் கொலையுதிர் காலம் படத்தில் வெளிநாடு வாழ் ஈழத்தமிழர்! யார் அவர் தெரியுமா

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா படங்களின் கதைகளை தேர்ந்தெடுப்பதில் மிகவும் கரார். மாயா, அறம் என கொடுத்தவருக்கு அண்மையில் வந்த ஐரா படம் வெற்றி பெறவில்லை.

கிடைக்கும் கதாபாத்திரங்களை கச்சிதமாக செய்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்கிறார். அந்த வகையில் அவரின் நடிப்பில் நாளை மறுநாள் வரும் ஜூன் 14 ல் கொலையுதிர்காலம் படம் வெளியாகவுள்ளது.

ஹாரர் திரில்லர் கதையாக அமைந்துள்ள இப்படத்தை சக்ரி டோலட்டி இயக்கியுள்ளார். இவர் அஜித் நடித்த பில்லா 2, கமல்ஹாசன் நடித்த உன்னை போல் ஒருவர் படங்களை இயக்கியவர்.

பில்லா 2, தசாவதாரம் என சில படங்களில் சின்ன ரோல்களில் நடித்துள்ளார். 6 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் மீண்டும் கொலையுதிர்காலம் படத்தின் மூலம் தன் படைப்பை வெளியிடுகிறார்.

இப்படத்தில் பிரித்தானியா வாழ் ஈழத் தமிழரும் குறும்பட இயக்குனருமான பிரேம் கதிர் நடித்துள்ளார். டிரைலரில் மற்றொரு நடிகையான பூமிகாவுடன் அவர் உரையாடுவது போல உள்ளது.

நயன்தாராவின் வெற்றியை இப்படம் உறுதி செய்யுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்.