Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நேர்கொண்ட பார்வைக்கு போட்டியாக விஜய் ரசிகர்கள் - ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம்

ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்த நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது. ரசிகர்களையும் அது வெகுவாக கவர்ந்து வருகிறது.

இந்நிலையில் ட்விட்டரில் #NerKondaPaarvaiTrailer என்ற டேக் தேசிய அளவின் ட்ரெண்ட் ஆனது. அவர்களுக்கு போட்டியாக தற்போது நடிகர் விஜய்யின் ரசிகர்களும் #VIJAYBdayManiaIn10D என்று ட்ரெண்ட் செய்ய துவங்கி, தற்போது இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளனர்.

மற்றொருபுறம் சூர்யா ரசிகர்கள் #FarmersKAAPPAANOnAug30th என்றும், தனுஷ் ரசிகர்களும் WE LOVE DHANUSH என்றும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.