Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இளம் நடிகைக்கு லிப்லாக் முத்தக்காட்சியால் சர்ச்சையில் சிக்கிய அப்பா வயது நடிகர்! பார்வைகளை அள்ளி பெரும் சாதனை செய்த டீசர்

சினிமா படங்களில் தற்போது முத்தக்காட்சிகள் அதிகமாகிவிட்டது. நீண்ட காட்சிகள் குறிப்பாக தெலுங்கு சினிமாக்களில் அண்மைகாலமாக இடம் பெற்று வருவது சர்ச்சையாகியுள்ளது.

தெலுங்கு சினிமாவில் முக்கிய சீனியர் ஹீரோகளில் ஒருவர் நாகார்ஜூனா. நடிகை சமந்தாவை தன் வீட்டு மருமகளாகவும் எடுத்துவிட்டார்.

தற்போது நாகார்ஜூனா நடிப்பில் மன்மதுடு 2 படத்தின் ஷுட்டிங் எடுக்கப்பட்டு வருகிறது. அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியானது. இதில் நீண்ட முத்தக்காட்சிகள் இருந்தன. ரகுல் பிரீத் சிங், அக்‌ஷரா கௌடா என இரு வேறு நடிகைகள் நடித்துள்ளனர்.

லிப் லாக்கில் இருக்கும் அந்த நடிகை யார் என்பது சர்ப்பிரைஸ் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்‌ஷராவுக்கு தான் லிப்லாக் கொடுத்துள்ளார் என சொல்லப்படுகிறது. இதனால் சமூகவலைதளங்களில் அப்பா வயது நடிகர் மகள் வயது நடிகைக்கு லிப் லாக் என விமர்சித்து வருகிறார்கள்.

கடந்த ஜூன் 13 ல் வந்த இந்த டீசர் இரண்டு நாட்களில் 49 லட்சம் பார்வைகளை அள்ளி சாதனை படைத்துள்ளது.