Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல பாடலாசிரியருக்கு வாழ்க்கையில் நேர்ந்த சோகம்! புகைப்படத்தை வெளியிட்டு மனக்கவலை

அண்மையில் அஜித் நடிப்பில் வந்த விஸ்வாசம் படத்தில் டங்கா டங்கா டங்கா பாடலை எழுதியவர் பாடலாசிரியர் அருண் பாரதி. மேடை பேச்சில் தான் இவரின் பயணம் தொடங்கியது. எழுத்தாளர், பாடலாசிரியர் என பயணித்துக்கொண்டிருகிறார்.

பல படங்களில் பணியாற்றி வரும் இவர் பால்ய பருவத்தில் மிகவும் வறுமையில் இருந்தாராம். அவரின் அப்பாவுக்கு போட்டோ ஸ்டூடியோ சென்று போட்டோ எடுக்க முடியாத கஷ்டத்தில் இருந்தாராம்.

அருண்பாரதி அவரின் அப்பாவுடன் போட்டோ எடுத்துக்கொண்டதே இல்லையாம். அவரின் அப்பாவின் மரணத்திற்கு பின் வங்கியில் விவசாயக்கடன் வாங்குவதற்காக அவரின் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் தன் கைக்கு கிடைத்தது என கூறி உலக அப்பாக்கள் தினம் இன்று என்பதால் மன உருக்கத்துடன் தன் அப்பாவின் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.