நடிகர் அருண் விஜய் நடிப்பில் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டிவருகிறார். இதற்கான ஜிம் ல் அதிக நேரம் செலவழித்து உடலை கட்டுடல் அழகாக மாற்றி வைத்திருக்கிறார். அவரின் ஃபிட்னஸை பார்த்து பலரும் ஆச்சர்யப்பட்டிருப்பார்கள்.
அண்மையில் வெளியான தடம் படம் நல்ல விமர்சனங்களையும், வரவேற்பையும் பெற்று வெற்றியை எட்டியது. படத்திற்கு நல்ல வசூலும் கிடைத்தது.
நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து வரும் அவர் அடுத்ததாக பாக்ஸர் படத்தில் நடிக்கிறார். இதற்காக தீவிர உடற்பயிற்சிகளும் மேற்கொண்டு வருகிறார். நேற்று இப்படத்தின் படபூஜைகள் போடப்பட்டது.
இதில் படக்குழுவுடன் அவரின் அப்பா விஜயகுமார், அம்மா, சகோதரி பிரீத்தா, மாமா இயக்குனர் ஹரி, மனைவி என குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.
With the blessings of god and all ur wishes, kick started my film #Boxer with the Pooja followed by shoot yesterday!! All charged up & excited to play the role..The first look will be revealed soon.. Can’t wait for you’ll to see...😘 pic.twitter.com/mZPDnmwAAu
— ArunVijay (@arunvijayno1) June 22, 2019