Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவமதித்த பிரபல நடிகர்! லைக் போட்ட சர்ச்சை நடிகை

தமிழ் சினிமாவின் முக்கிய அமைப்பான தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் ஜூன் 23 ம் தேதியான இன்று நடத்தப்படுவதாக சொல்லப்பட்டு வந்தது. காலை 7 மணிக்கு தேர்தல் தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஷால், நாசர், கார்த்தியின் பாண்டவர் அணிக்கும் பாக்யராஜ், ஐசரி கணேஷின் சுவாமி சங்கரதாஸ் அணிக்கும் கருத்து வேறுபாடுகள் நிலவிவருகிறது.

இந்நிலையில் ரஜினி படப்பிடிப்பில் இருப்பதால் தேர்தலில் ஒட்டளிக்க வர இயலாத காரணத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

ரஜினியை அவமதிக்கும் விதமாக நடிகர் எஸ்.வி.சேகர் டியர் ரஜினி நீங்க ஒருத்தர் மட்டும் ஓட்டு போட முடியாம இல்ல. 100 க்கும் அதிகமான டிராமா ஆர்டிஸ்ட் ஓட்டு போட முடியாத நிலைல இருக்காங்க. தேர்தல் முறைகளும் ஏற்பாடுகளும், சரியில்லாத காரணத்தால் நடிகர் சங்க தேர்தல் நான் புறக்கணிக்கிறேன் என கூறியுள்ளார்.

இதை பிக்பாஸ் காயத்திரி ரகுராமும் லைக் செய்துள்ளார்.