பரபரப்புடன் தொடங்கிய நடிகர் சங்க தேர்தல்! லைவ் அப்டேஸ் - பல குழப்பங்கள், குளறுபடிகள்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் இன்று நடைபெறுகிறது. நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் கொண்ட பாண்டவர் அணி மீண்டும் போட்டியிடுகிறது. அவர்களிடமிருந்து விலகி சென்றுள்ள ஐசரி கணேஷ் மற்றும் பலர் பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணி என போட்டியிருகிறார்கள்.
இன்று காலை 7 மணிக்கு சென்னையில் ஓட்டெடுப்பு தொடங்கியுள்ளது. தற்போது சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் மேல்நிலைப் பள்ளியில் தேர்தல் நடைபெறுகிறது.
இதில் பேட்டியளித்த சங்கரதாஸ் அணியை சேர்ந்த காயத்திரி ரகுராம் பாண்டவர் அணி மீது பல குற்றச்சாட்டுகளை எடுத்து வைத்துள்ளார். நேற்று இரவு தான் தேர்தல் நடைபெறும் இடம் எங்கே என தெரிந்துள்ளது. பலரும் தேர்தல் நடைபெறாது என அவரவர் வேலைகளுக்கு சென்றுவிட்டனர்.
நாங்கள் ஜெயித்து விடுவோம் என்பதால் தேர்தலை தடுக்கும் விதமாக பின்னால் இருந்து வேலை செய்கிறார்கள்.
#NadigarSangamElections2019 #NadigarSangamElections God bless need all your love and prayers👍🙏 pic.twitter.com/7kUFxD1OEf
— Actress Harathi (@harathi_hahaha) June 23, 2019