இன்று நடைபெறும் நடிகர் சங்க தேர்தலில் சுவாமி சங்கர தாஸ் அணி சார்பில் பொதுச்செயலாளராக போட்டியிடுபவர் தயாரிப்பாளர், நடிகர் ஐசரி கணேஷ்.
நடிகர் சங்க தேர்தலில் இருந்த தடையை எதிர்த்து நீதிமன்றத்தை விஷால் குழு அணுகியது. பின்னர் தடையும் நீக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஐசரி கணேஷ் கைது செய்யப்படலாம் என தகவல் சுற்றிவருகிறது.
தேர்தலுக்கு பாதுகாப்பு கேட்டு விஷால் மனு தாக்க செய்திருந்தார். இதுகுறித்த வழக்கு விசாரணைக்கு பிறகு நீதிபதி வெங்கடேஷ் வீட்டில் நடிகர் சங்கத்திற்கு காவல் துறை தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் அவரின் குறிப்பில் சுவாமி சங்கரதாஸ் அணிக்கு சாதகமாக தீர்ப்பை வழங்க கோரி ஐசரி கணேஷ் மற்றும் அனந்த நாராயணன் ஆகிய இருவரும் அவரை அணுகினார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதியை மிக தவறான அவர்கள் இருவரும் அணுகியிருந்தால், கைதாவது உறுதி என சட்ட வல்லுநர்கள் கூறிவருகிறார்கள்.
இத்துடன் ஐசரி கணேஷ் மீது அவர் நடத்தி வரும் கல்வி நிறுவனங்கள் விசயத்தில் பல வழக்குகள் உள்ளதாகவும், பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளையில் உறுப்பினராக இருந்த போது சக உறுப்பினரை இவர் தாக்கியதால் 10 நாட்கள் சிறையில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை...