தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் இன்று சென்னை மைலாப்பூர் புனித எப்பாஸ் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி வாக்களிப்பு நடைபெற்று வருகிறது.
பல சிக்கல்களுக்கு இடையே இந்த தேர்தல் நடைபெற்று வருகிறது. பாண்டவர் அணி இரண்டாக பிரிந்து தனித்தனி அணியாக போட்டியிடுகிறார்கள்.
இதில் காலை முதல் சினிமா பிரபலங்களும், நாடக நடிகர், நடிகைகளும் கலந்துகொண்டனர். தள்ளாத வயதிலும் சக்கர நாற்காலியில் வந்து பலர் வாக்களித்தனர்.
இதில் நடிகை சரண்யா கணவரின் பொன்வண்ணன், கே.ஆர்.விஜயா, சூர்யா, சிவக்குமார், நடிகை அம்பிகா, ராதா, ஐஸ்வர்யா, ரோஹினி ஆகியோர் வாக்களித்தனர்.