Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்தே ஆகவேண்டும்! பிரபல நடிகர் பேட்டி

அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியானது. தீரன் பட புகழ் இயக்குனர் வினோத் இப்படத்தை இயக்கியுள்ளார்.

போனி கபூர் இப்படத்தை தயாரிக்க மீண்டும் இதே கூட்டணி அஜித்தின் 60வது படத்திலும் தொடர்கிறது. நேர்கொண்ட பார்வையில் அஜித்தை ஒரு வழக்கறிஞராக நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

படத்தின் மீதான ஆர்வத்தை பலரும் அண்மையில் வெளிப்படுத்தினார்கள். இந்த வரிசையில் தற்போது நடிகர் பார்த்திபன் சமீபத்தில் எந்த அஜித் படத்தையும் பார்க்கவில்லை.

ஆனால் நேர்கொண்ட பார்வை டிரைலரை பார்த்த பின் படத்தை நிச்சயம் பார்த்தே ஆகவேண்டும் என முடிவு செய்துவிட்டேன் என பேட்டியில் கூறியுள்ளார். மேலும் வினோத் இவருடன் இரண்டு படங்களில் பணியாற்றியுள்ளார்.