Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் சங்க தேர்தலில் பிரபல நடிகைக்கு நடந்த கொடுமை! சங்கம், சினிமாவுக்காக பாடுபட்டவர்க்கே இப்படியா

நடிகர் சங்க தேர்தல் நேற்று சென்னை மைலாப்பூரில் நடைபெற்றது. நேற்று காலை 7 மணிக்கே ஓட்டு பதிவு தொடங்கியது. பாண்டவர் அணி, சுவாமி சங்கரதாஸ் அணி என இரு அணிகள் மோதியிருக்கின்றன.

சினிமா, சின்னத்திரை பிரபலங்கள் என பலர் இதில் கலந்துகொண்டனர். இருதரப்பு சார்பிலும் பல குற்றச்சாட்டுகள் ஒருவர் மீது ஒருவர் சுமத்தினர்.

இதில் நடிகர் மோகனின் ஓட்டை வேற யாரோ கள்ள ஓட்டாக போட்டதை அறிவீர்கள் தான். பின் அவருக்கும் தனி ஓட்டுரிமை கொடுக்கப்பட்டது. அவரும் வாக்களித்தார்.

அதே வேளையில் பழம்பெரும் நடிகை சச்சுவும் வாக்களித்தார். எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்தில் இருந்து நடித்து வரும் இவருக்கு கடந்த தேர்தலில் ஓட்டுரிமை இல்லாமல் போனது.

காரணம் அவரின் உறுப்பினர் அட்டையை புதுபிக்காமல் வைத்திருந்தது தானா. சினிமா, சங்கத்திற்காக பாடுபட்ட நடிகைக்கே இப்படி ஒரு நிலை.

இந்நிலையில் இவ்வருடம் வாக்களித்த பின் அவர் 20 வருடங்களுக்கு முன் ஓட்டளித்தது போல மகிழ்ச்சியாக இருக்கிறது என கூறி பெருமைப்பட்டுள்ளார்.