Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பெண்கள் கழிவறையில் ரகசிய கேமிரா! பிரபல நடிகரின் படப்பிடிப்பில் நடந்த கேவலமான செயல் - கைது செய்யப்பட்ட நபர்

பெண்களுக்கு எதிரான குற்றம் அண்மைகாலமாக அதிகரித்து வருகிறது. சினிமா வட்டாரத்திலும் இது தொடர்புடைய சம்பவங்கள் நடைபெறுகின்றன.

ஹாலிவுட் படங்களுக்கு உலகளவில் நல்ல வரவேற்பும், வசூல் கலெக்‌ஷனும் இருக்கிறது. ரசிகர்கள் எண்ணிக்கையும் பெரும் மடங்கில் இருக்கின்றது.

அவ்வகையில் ஜேம்ஸ் பாண்ட் படங்களை குறிப்பிட்டு சொல்லலாம். தற்போது இதன் 25 ம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.

இதில் டேனியல் கிரேக் நடித்து வருகிறார். அவருக்கு அண்மையில் காலில் காயம் ஏற்பட்டதால் படப்பிடிப்பு சில நாட்கள் நிறுத்தப்பட்டது.

பின் சில நாட்கள் கழித்து தான் மீண்டும் லண்டனில் ஷூட்டிங் தொடங்கியது. இதற்கு பிரம்மாண்ட செட் போடப்பட்டது.

இதில் பெண்கள் கழிவறையில் ரகசிய கேமிரா வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் ஸ்டூடியோ நிர்வாகம் இந்த விசயத்தை சாதாரண விசயம், போலிஸ் விசாரணை நடைபெறுகிறது என கூறியுள்ளது.

இந்ந விவகாரத்தில் பீட்டர் ஹார்ட்லி என்பவரை போலிஸ் கைது செய்துள்ளது.