Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

போன் ஆஃப் செய்துட்டு தலைமறைவாகிட்டேன்: பிகில் பட ரைட்டர்

விஜய்யின் பிகில் படத்தை அட்லீ இயக்கிவருகிறார். அவரோடு இணைந்து ரமணகிரிவாசன் வசனம் எழுதியுள்ளார்.

ரமணகிரிவாசன் இதற்கு முன்பு விஜய்யின் மெர்சல், தெறி போன்ற படங்களில் பணியாற்றியவர். மெர்சல் படம் வெளியாகி அதில் வரும் வசனங்கள் தேசிய அளவில் சர்ச்சையானது. ஒரு முக்கிய அரசியல் கட்சி படத்தில் வரும் ஜிஎஸ்டி பற்றிய வசனத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

ரமணகிரிவாசன் தற்போது அளித்துள்ள பேட்டியில் மெர்சல் பட சர்ச்சை பற்றி பேசியுள்ளார். "மெர்சல் ரிலீஸ் சமயத்தில் நம்மை பேட்டி எடுக்க வருவார்களா என எதிர்பார்த்து காத்திருந்தேன். ஆனால் ரிலீசுக்கு பிறகு சர்ச்சையாகி மொத்த மீடியாவும் படத்தின் ரைட்டரைதான் தேடிக்கொண்டிருந்தார். நான் தலைமறைவாகாத குறையாக போனை ஆஃப் செய்துவிட்டு இருந்துவிட்டேன்" என கூறியுள்ளார்.