Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

28 வருடங்களுக்கு பிறகு நடிகை மீனா பிரபல நடிகருக்கு ஜோடியாக! ஆரம்பமே அமர்க்களம்

நடிகை மீனா அஜித், விஜய், ரஜினி என பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர். கண்ணழகி என்ற பெயரையும் ரசிகர்கள் அவருக்கு வைத்தனர். திருமணத்திற்கு பின் அவர் படங்களில் நடிக்கவில்லை. டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார். அவரின் மகள் நைனிகா விஜய்க்கு மகளாக தெறி படத்தில் நடித்திருந்தார்.

தமிழ் சினிமாவின் முக்கிய ஹீரோவாக இருந்த ராஜ்கிரணுக்கு ஜோடியாக என் ராசாவின் மனசிலே படத்தில் நடித்திருந்தார். 1991 ல் வெளிவந்த இப்படம் ஹிட்டாகி வசூல் சாதனை நிகழ்த்தியது. மேலும் இது ராஜ்கிரணுக்கு அறிமுக படமும் கூட. இதன் பின் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.

இந்நிலையில் 28 வருடங்களுக்கு பிறகு இவரும் நடிகை மீனாவும் ஜோடியாக முக்கிய கேரக்டர்களில் மலையாளத்தில் ஷைலாக் படத்தில் நடிக்கவுள்ளார்களாம்.

இப்படம் தமிழ், தெலுங்கிலும் தயாராகவுள்ளது. இதன் தொடக்கவிழா நிகழ்ச்சியில் இருவரும் நடிகர் மம்முட்டியுடன் பங்கேற்றனர். அப்போது ரசிகர்களின் கைதட்டல் பலமாக இருந்தது. விரைவில் படப்பிடிப்புகள் தொடங்கவுள்ளதாம்.