Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவகார்த்திகேயனின் அடுத்த ஸ்பெஷல்! முக்கிய அறிவிப்பு

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான மிஸ்டர் லோக்கல் படம் சில நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தது.

படம் எதிர்பார்த்த படி அமையாதது ரசிகர்களுக்கும் வருத்தமே. மேலும் படத்தில் வசூலும் இதனால் பாதிக்கப்பட்டது. அத்துடன் சிவகார்த்திகேயனும் விமர்சனங்களை ஏற்றுக்கொண்டார்.

அவரின் தயாரிப்பில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது அவர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் 2 அல்லது 3 வாரத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.