Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பெரும் வசூல் செய்த KGF படத்தின் அடுத்த பாகம்! ரசிகர்களை குஷியாக்கிய செய்தி

கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் KGF. தமிழில் இப்படத்தினை நடிகர் விஷால் வெளியிட்டிருந்தார்.

கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் வந்த இந்த ஆக்‌ஷன் படத்திற்கு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு இருந்தது. ரூ 200 கோடிகளை தாண்டி வசூல் செய்து சாதனை படைத்தது.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் முந்தய பாகத்தை விட கூடுதலான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகிறது. இப்படம் குறித்த அப்டேட்டுகளை ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் விரைவில் இப்படத்தில் இருந்து அப்டேட் வரவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.