அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் படம் இவ்வருட தீபாவளி பண்டிகைக்காக வெளிவிடப்படுகிறது. இப்படத்திலிருந்து நாளை சிங்கபெண்ணே பாடல் வெளியாவதை காண ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
எப்படியும் நாளை சமூகவலைதளங்களில் டிரெண்டிங்கில் இடம் பெற்றுவிடும் என்பதில் சந்தேகமில்லை தானே. இப்படத்தின் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன் சென்னை ஒ எம் ஆர் ல் உள்ள கல்லூரியில் நடைபெற்று வந்தது.
இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் உள்ள பிரபல கால்பந்து மைதானத்தில் முக்கிய காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாம். இம்மாத இறுதியில் தொடங்கி அடுத்த மாதத்திற்கு படப்பிடிப்புகள் முடிக்க திட்ட மிட்டிருக்கிறார்களாம்.