Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பலரையும் கவர்ந்த பிரபல காமெடி நடிகர் யோகி பாபுவின் அடுத்த அதிரடி! விஜய் 64 ஸ்பெஷல்

கோலிவுட் திரையுலகில் யோகிபாபு தற்போது தவிர்க்க முடியாத ஒரு காமெடி நடிகராகிவிட்டார். அவரின் நடிப்பில் அண்மையில் தர்ம பிரபு படம் வெளியாக கலவையான விமர்சனங்களை சந்தித்தது.

தொடர்ந்து வெளியான கூர்கா அவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது. இரு படங்களில் அவர் ஹிரோவாக நடித்திருந்தார். அடுத்ததாக அவர் மடோனே அஸ்வின் இயக்கத்தில் மண்டேலா படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார்.

இப்படத்தை YNOT ஸ்டூடியோஸ் தயாரிக்க படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இதன் தொடக்க படப்பிடிப்பில் இயக்குனர் பாலாஜி மோகன் பங்கேற்றுள்ளார். ஃபர்ஸ்ட் டேக் அடித்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் மாநகரம், கைதி படங்களை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எடுக்கும் விஜய் 64 படத்தில் பணியாற்றும் பிலோமின் ராஜ் என்பவர் தான் இப்படத்திற்கும் எடிட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.