Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திடீரென மாயமான இளம் நடிகை! கடத்தப்பட்டாரா? அதிர வைத்த உண்மை பின்னணி

சினிமா பிரபலங்கள் சில பொது இடங்களில் ரசிகர்களின் கண்களில் தென்படுவதுண்டு. ஆனால் படம் ரிலீஸ் ஆகும் நேரத்தில் நடிகையை காணவில்லை என்றால் நம்பமுடிகிறதா?

அப்படியான ஒரு சம்பவம் தற்போது தமிழ் சினிமாவில் நிகழ்ந்துள்ளது. வரும் ஆகஸ்ட் 2 ல் வெளியாக இருக்கும் படம் தொரட்டி. இப்படத்தில் ஹீரோயினாக சத்யகலா என்பவர் நடித்துள்ளார்.

இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஷமன் மித்ரு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இதில் அவர் சத்யகலா நடித்துள்ள தொரட்டி படத்தை நான் தயாரித்துள்ளேன்.

படம் ரிலீஸ் ஆகும் நேரத்தில் சத்யகலாவை மாயமாகியுள்ளார். அவர் சினிமாவில் பணியாற்றுவது அவரது தந்தை ரத்தினத்திற்கு பிடிக்கவில்லை. இதனால் சத்யகலாவுக்கு திருமணம் செய்யும் முயற்சி நடைபெறுவதாக முன்பே அவர் என்னிடம் கூறியிருந்தார். தற்போது அவர் மாயமாகியுள்ளார்.

கடந்த ஜூலை 25 ல் பொள்ளாச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால் போலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சென்னையில் சத்யகலாவின் வீட்டிலும் யாரும் இல்லை.

செல்போனும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. ரத்தினத்தில் சட்ட விரோத காவலில் இருக்கும் நடிகை சத்யகலாவை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவேண்டும் என கூறியுள்ளார்.

வெள்ளிக்கிழமை தொடரப்பட்ட இவ்வழக்கை வரும் திங்கள்கிழமை விசாரிப்பதாக நீதிபதிகள் கூறியுள்ளனர்.