Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நேர்கொண்ட பார்வை படத்திற்கு சிக்கல்? அஜித், விஜய் போன்ற டாப் ஹீரோ படங்களுக்கு சங்கம் புது கட்டுப்பாடு

ரஜினி, அஜித், விஜய், கமல் போன்ற தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களின் படங்களின் ரிலீசுக்கு புதிய கட்டுப்பாடு விதித்து தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது.

சேலம் பகுதியில் டாப் ஹீரோ படங்களுக்கு 45 பிரிண்ட்கள் மட்டும் ரிலீஸ் செய்யப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் மற்ற சின்ன பட்ஜெட் படங்களுக்கு 35 பிரிண்ட்கள் மட்டுமே ரிலீஸ் செய்யப்படும். எனவும் கூறியுள்ளனர்.

இதனால் அடுத்து ரிலீஸ் ஆகவுள்ள அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்திற்கு சிக்கல் வரலாம் என கூறப்படுகிறது.