Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல 60 படத்திற்காக ரசிகர்கள் எதிர்பார்ப்பது இதை தான்! நிறைவேறினால் பெரும் கொண்டாட்டம் தான்

அஜித் வழக்கறிஞராக நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் 8 ல் ரிலீஸ் ஆகவுள்ளது. போனி கபூர் தயாரிக்க படத்தை வினோத் இயக்கியுள்ளார். யுவன் இசையமைத்துள்ளார்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நேரத்தில் நேற்று போனி கபூர் தல 60 படத்தை உறுதிசெய்தார். வினோத் இப்படத்தை இயக்குகிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் நேற்று டிவிட்டரில் வெளியானது.

ஆகஸ்ட் மாதத்தில் இப்படம் படபூஜையுடன் தொடங்குகிறது. இந்நிலையில் அஜித் ரசிகர்கள் தல தீபாவளி கொண்டாடி 4 வருடங்கள் ஆகிவிட்டது. எனவே தல 60 படத்தை 2020 தீபாவளிக்கு ரிலீஸ் செய்யுமாறு தயாரிப்பாளரிடத்தில் அன்புடன் கோரிக்கை வைத்துள்ளனர்.

ரசிகர்களின் ஆசை நிறைவேறினால் பெரும் கொண்டாட்டமே.