Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியன் 2 படத்திலிருந்து விலகிய முக்கிய பிரபலம்!

ஷங்கரின் இந்தியன் 2 படம் இந்த வருட துவங்கத்தில் ஷூட்டிங் ஆரம்பித்தது. ஆனால் சில காரணங்களால் சில நாட்களிலேயே அது நிறுத்தப்பட்டது.

பின்னர் படம் கைவிடப்பட்டுவிட்டது என்றும் செய்திகள் அடிக்கடி வந்தன. ஆனால் ரசிகர்கள் நிம்மதி அடையும் விதத்தில் ஷூட்டிங் வரும் ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் தொடங்குகிறது. அதில் கமல், காஜல், சித்தார்த், ராகுல் ப்ரீத், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.

இந்தியன் 2க்கு முதலில் ஒளிப்பதிவாளராக ரவிவர்மன் தான் ஒப்பந்தம் ஆனார். ஆனால் அவர் தற்போது வெளியேறிவிட்டதால், அவருக்கு பதிலாக இப்போது ரத்னவேல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ரத்னவேல் இதற்கு முன்பு ஷங்கரின் எந்திரன் படத்தில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.