Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எல்லைமீறிய விஜய்-அஜித் ரசிகர்கள் சண்டை! மருத்துவமனையில் உயிருக்கு போராடும் அஜித் ரசிகர் - அதிர்ச்சி சம்பவம்

விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் ரசிகர்கள் இணையத்தில் சண்டை போட்டு கொள்வது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. நேற்று முன்தினம் #RIPVijay என்கிற டேக்கை ட்ரெண்ட் செய்து அஜித் ரசிகர்கள் சர்ச்சை ஏற்படுத்தினர்.

இந்நிலையில் இந்த சண்டை தற்போது மோசமான கட்டத்தை எட்டியுள்ளது. விஜய் ரசிகர் ஒருவர் அஜித் ரசிகரை கத்தியால் வெட்டியுள்ளார். இதனால் அஜித் ரசிகர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னை புழல் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்துவந்த உமாசங்கர்(32), ரோஷன்(34) ஆகியோர் வசித்துவந்தனர். இதில் உமாசங்கர் அஜித் ரசிகர். அவர் விஜய் பற்று தரக்குறைவாக பேசியுள்ளார். அதை பார்த்த விஜய் ரசிகரான ரோஷன் கோபத்தில் கத்தி எடுத்துவந்து உமாஷங்கரின் தலை, கழுத்து, நெஞ்சு என சரமாரியாக வெட்டியுள்ளார்.

தற்போது உமா ஷங்கர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். ரோஷனை கைது செய்த போலீசார் சிறையில் அடைந்துள்ளனர்.