Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நேர்கொண்ட பார்வை ரிலிஸானால் இது நிச்சயம் நடக்கும்.. எச் வினோத் உறுதி

நேர்கொண்ட பார்வை ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ளது. படத்திற்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.

இது பற்றி இயக்குனர் வினோத் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தான் அஜித் ரசிகர்களுக்காகவே 25 நிமிடங்கள் கமர்ஷியலாக பல விஷயங்கள் சேர்த்திருப்பதாக கூறியுள்ளார்.

"இந்த படத்தின் ரிலீசுக்கு பிறகு பெண்கள் சுதந்திரம் பற்றி நிச்சயம் ஒரு பெரிய விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கிறேன். தற்போதுள்ள சமுதாயத்தில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. "

"அதையும் தாண்டி வெளியில் வந்து சுதந்திரமாக வாழும் பெண்களை நாம் தவறாகத்தான் பார்க்கிறோம்" என எச்.வினோத் கூறியுள்ளார்.