Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல தொலைக்காட்சியை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள்

தொடர்ந்து பல வருடங்கள் அரசியல் பிரவேசத்தை தள்ளிவைத்துகொண்டே போகிறார் என ரஜினி மீது உள்ள ஒரு விமர்சனம் உள்ளது. அதை ஜெயம்ரவியின் கோமாளி படத்தில் கலாய்க்கும் விதத்தில் ஒரு காட்சி வைத்திருக்கிறார்கள்.

16 வருடம் கோமாவில் இருந்த ஒருவர் தற்போது எழுந்து பார்க்கும் போதும் ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பதை காமெடியாக சித்தரித்துள்ளது அந்த காட்சி. இது ரஜினி ரசிகர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஒரு பிரபல செய்தி தொலைக்காட்சி கோமாளி பட காட்சி பற்றிய செய்தியில் ரஜினியை தாக்கி செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது இந்த தொலைக்காட்சியையும் ரஜினி ரசிகர்கள் தாக்கி பேசி வருகின்றனர். தேசிய அளவில் #comaliNews7channel என்ற ஹேஷ்டேக்கை அவர்கள் ட்ரென்டு செய்து வருகின்றனர்.