Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அதர்வா படத்தை டிவியில் ஒளிபரப்ப தடை

நடிகர் அதர்வா-ஹன்சிகா ஜோடியாக நடித்திருந்த படம் 100. இந்த படம் கடந்த மே மாதம் வெளியானது. இதில் அதர்வா போலீஸ் கண்ட்ரோல் ரூமில் கால்கள் பேசும் ஆபரேட்டராக நடித்திருப்பார்.

இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் MM Entertainment என்ற நிறுவனத்திற்கு 1 கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்துள்ளாராம். அது தொடர்பாக 100 படத்தின் ரிலீஸ் சமயத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

முதலில் 100 ரிலீசுக்கு கோர்ட் தடை விதிக்கப்பட்டாலும், பின்னர் ஆரா நிறுவனம் கொடுத்த வாக்குறுதியால் ரிலீசுக்கு அனுமதி அளித்தது. ஆனால் தற்போது வரை கடனை திருப்பி தரவில்லை என கூறி மீண்டும் நீதிமன்றத்தை நாடியுள்ளனர் MM Entertainment.

இதனால் தற்போது 100 படத்தினை டிவியில் ஒளிபரப்ப தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.