Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உண்மை வெளியானது! கடுமையாக திட்டி தீர்த்த ரசிகர்கள் - பெரும் சர்ச்சையால் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்

சூப்பர் ரஜினிகாந்த் நடித்த தளபதி படத்தில் நண்பனாக நடித்தவர் மம்முட்டி. நட்புக்கு அடையாளமாக இன்னும் இப்படத்தின் காட்டுக்குயிலு பாடல் திகழ்ந்து வருகிறது.

மலையாள சினிமாவின் பிரபல நடிகரான மம்முட்டி பல ஹிட் படங்களில் நடித்தவர். அவரின் நடிப்பில் வந்த பேரன்பு படம் பெரிதும் பாரட்டபட்டது. இப்படத்திற்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

அண்மையில் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. ஆனால் கிடைக்காததால் அவரின் ரசிகர்கள் மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளானார்கள். இதனால் விருதுகள் தேர்வு நடுவர் குழு தலைவர் ராகுல் ரவைல் ஃபேஸ்புக் பக்கத்திற்கு சென்று கடுமையாக திட்டி தீர்த்துள்ளனர்.

இதனால் அவர் மம்முட்டிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதில் உங்கள் ரசிகர்களின் அவதூறுகளை எதிர்கொண்டு வருகிறேன். பேரன்பு படத்திற்கு விருது தரவில்லை என விமர்சிக்கிறார்கள்.

நடுவர் தீர்ப்பை யாரும் கேள்வி கேட்க முடியாது. உங்கள் படத்தை உள்ளூர் குழு நிராகரித்து விட்டது. மத்திய குழுவுக்கு அந்த படம் வரவில்லை. உங்கள் ரசிகர்களை கட்டுப்படுத்துங்கள் என கூறியுள்ளார்.

இதற்கு மம்முட்டி இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நடந்த சம்பவங்களுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.