Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ்ராக்கர்ஸ் பற்றி டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழ் சினிமா மட்டுமின்றி தற்போது ஹிந்தி, தெலுங்கு சினிமா துறையினருக்கும் பெரிய அளவில் தலைவலியாக இருந்து வருகிறது தமிழ்ராக்கர்ஸ் இணையத்தளம்.

படம் ரிலீஸ ஆன சில மணி நேரங்களிலேயே சட்ட விரோதமாக இந்த இணையத்தளத்தில் படங்கள் வெளியிடப்பட்டுவிடுவதால் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்க நிறுவனம் ஒன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தமிழ்ராக்கர்ஸ் போன்ற இணையத்தளங்களுக்கு தடை விதிக்கவேண்டும் என கேட்டிருந்தது.

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் Internet service providers (ISPs)க்கு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. Tamilrockers, eztv, katmovies மற்றும் limetorrents ஆகிய இணையதளங்களுக்கு தடை விதித்துள்ளார்.