Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சாஹோ மொத்த பட்ஜெட் எவ்வளவு? பிரபாஸ் பதில் கேட்டு அனைவரும் ஷாக்

பிரபாஸ்-ஷ்ரத்தா கபூர் ஜோடியாக நடித்துள்ள சாஹோ படம் இந்த மாத இறுதியில் ரிலீஸ் ஆகிறது. ஹிந்தி, தமிழ், தெலுங்கில் இந்த படம் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த படத்திற்கு 250 கோடி ருபாய் பட்ஜெட் என முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது ஒரு பேட்டியில் பிரபாஸ் அளித்துள்ள பதில் பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.

"ஆம் இந்த படத்தின் பட்ஜெட் 350 கோடி ருபாய். உலகத்தின் பல இடங்களில் ஷூட்டிங் நடத்தப்பட்டுள்ளது. அனைத்தும் ரியலாக எடுக்கப்பட்டுள்ளது" என கூறியுள்ளார்.

அபுதாபியில் படமாக்கப்பட்ட ஒரு சேஸ் காட்சிக்கு மட்டும் 80 கோடி ருபாய் செலவிடப்பட்டுள்ளது என முன்பே செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது.