Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நேர்கொண்ட பார்வை போன்ற படத்தில் நடிக்க விஜய் இதனால் தான் பயப்படுகிறார்: முன்னணி நடிகர் பேட்டி

தற்போது அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் தமிழ் சினிமாவில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. டாப் ஹீரோக்கள் மாஸ் மசாலாவை தவிர்த்து சமூக கருத்து சொல்லும் படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் ஏற்பார்களா, வசூல் வருமா என்கிற கேள்விக்கும் பதில் கிடைத்துள்ளது.

இது போன்ற படங்களில் நடிக்க விஜய் ஏன் பயப்படுகிறார் என பிரபல நடிகர் மனோபாலா ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

"எச்.வினோத் இந்த படம் துவங்கும் முன்பே விஜய்யிடம் ஒரு கதை சொன்னார். அஜித் எடுத்துள்ள அதே அளவு ரிஸ்க் எடுக்க விஜய்யும் தயாராக இருக்கிறார். விஜய்யின் வியாபாரமா பெரியது. 100 - 150 கோடி வியாபாரம் ஆகும் ஒரு படத்தில் சிறிய தவறு ஏற்பட்டாலும் தயாரிப்பாளர் விநியோகஸ்தர்கள் பலர் பாதிக்கப்படுவார்கள். விஜய் அடுத்தவர்கள் காசில் ஊறுகாய் போட விரும்பவில்லை," என மனோபாலா கூறியுள்ளார்.

எச்.வினோத்தின் முதல் படம் சதுரங்க வேட்டை படத்தினை தயாரித்தவர் மனோபாலா என்பது குறிப்பிடத்தக்கது.