Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரிலீஸுக்கு முன்பே சாஹோ தயாரிப்பாளருக்கு இவ்வளவு லாபமா.. புதிய பிரம்மாண்டம்

பிரபாஸ் நடித்துள்ள ஆக்ஷன் திரில்லர் படம் சாஹோ நாடு முழுவதும் ஆகஸ்ட் 30ம் தேதி ரிலீஸ் ஆகிறது. ஆகஸ்ட் 15 என இருந்த ரிலீஸ் தேதியை போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் முடியாததால் தள்ளிவைத்தனர்.

இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 350 கோடி என சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரபாஸ் கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் இந்த படத்தின் ரிலீசுக்கு முன்பே தயாரிப்பாளருக்கு பெரிய அளவுக்கு லாபம் வந்துள்ளது என கூறப்படுகிறது.

ரிலீஸ் உரிமைகள் விற்பதன் மூலம் மட்டுமே 320 கோடி ருபாய் தயாரிப்பாளருக்கு கிடைத்துள்ளதாம். மேலும் சாட்டிலைட், ஆன்லைன் ஸ்ட்ரீமிங் உரிமைகள் விற்கப்படமால் உள்ளது. இதனால் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய அளவில் லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.