Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கோமாளி மட்டுமில்ல, இந்த ஊர்ல எந்த படமும் வராதாம்! தயாரிப்பாளர் எடுத்த அதிரடி முடிவு

ஜெயம் ரவி நடிப்பில் அண்மையில் பெரும் சர்ச்சையில் சிக்கிய படம் கோமாளி. 90 களில் நடந்த நிகழ்வுகளை நினைவு படுத்தும் விதமாக இப்படம் அமைந்துள்ளது.

சமீபத்தில் வந்த இதன் டிரைலரில் ரஜினிகாந்தின் அரசியல் வருகையை கேலி செய்து விமர்சிக்கும் விதமாக காட்சிகள் சர்ச்சையானதை தொடர்ந்து அதனை நீக்குவதாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அறிவித்தார்.

இது ஒரு பக்கம் இருக்க திருச்சி திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் ஆகியோர் அவரிடம் படத்தை வெளியிட சில நிபந்தனைகளை விதித்துள்ளனர்.

இது பணம் பறிக்கும் முயற்சி என சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் கணேஷ் தயாரிப்பாளர் சங்கத்திடம் பேசியதோடு படத்தை திருச்சியில் வெளியிடப்போவதில்லை எனவும் இனி அங்கு எந்தப்படமும் வெளியாகாது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.