Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இனி பெண்களுக்கு அஜித் தான் தல! விசில், கைதட்டலை பார்த்து மிரண்டு போன பிரபல நடிகர்

நேர்கொண்ட பார்வை படம் வெளியாகி சமூகத்தில் உள்ள சினிமா ரசிகர்களை மட்டுமில்லாமல் மற்ற துறை சார்ந்தவர்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது. படம் வெளியாகி ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில் இன்றும் அநேக இடங்களில் தியேட்டர்களில் ஹவுஸ் புல்லாக ஓடிகொண்டிருக்கிறது.

இப்படத்தில் அஜித்துடன் நடித்த பழம் பெரும் நடிகர் ஜூனியர் பாலய்யா அளித்துள்ள பேட்டியில் "அஜித் சாருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரை தல என கூப்பிடும் அளவிற்கு ஒரு இடத்தை கொடுத்திருக்கிறார்கள். ஆண்கள் மட்டுமில்லாமல் இனி பெண்களும் அவரை தல என கூப்பிடுவார்கள்...

தியேட்டரில் நான் படம் பார்க்கும் போது பெண்களும் ஆண்கள் போல சத்தம் போடுவதை பார்த்தேன். படத்தின் ஒரு காட்சியில் நான் தம்பி தம்பி என கூப்பிடும் போது காரை எடுத்துக்கொண்டு வேகமாகப்போய்விடுவார். இந்த காட்சிக்கு பெரும் விசில் சத்தமும், கை தட்டலும் பறந்தது. இது தான் என்னை மிரள வைத்தது" என கூறியுள்ளார்.