சர்கார் படத்திற்காக கிடைத்த முக்கிய விருது! பிரபல நடிகை பெருமிதம் - குவிந்தது வாழ்த்துக்கள்
கடந்த 2018 ல் தீபாவளிக்கு வெளியாக பிளாக் பஸ்டர் ஹிட்டான படம் சர்கார். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இப்படத்திற்கு பல சர்ச்சைகளும், எதிர்ப்புகளும் இருந்தது.
விஜய் இப்படத்தில் சொல்லிய தேர்தல் ஓட்டுரிமை குறித்த 49P சட்டம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. அதன் தாக்கம் நடந்துமுடிந்த தேர்தல்களிலும் வெளிப்பட்டது.
இப்படத்தை நெகட்டிவ் கேரக்டரில் நடித்தவர் வரலட்சுமி. அரசியல் வாதி போல வந்த இவரின் நடிப்பும் பெரிதும் பேசப்பட்டது. தற்போது துபாய் நாட்டில் நடைபெற்று வரும் SIIMA விருதுகள் 2019 விழாவில் Best negative actor என்ற தகுதியில் விருது வழங்கப்பட்டுள்ளது.
Thank you #SIIMAAwards2019 for giving the best negative actor..feels so good to have your hard work recognized..thank you @ARMurugadoss sir n @dirlingusamy for giving me 2 amazing roles last year..To all my fans I love u..thank you for loving me n supporting me no matter what 😘 pic.twitter.com/yKBOuRXHIP
— varalaxmi sarathkumar (@varusarath) August 17, 2019