Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யுடன் மோத வந்த முக்கிய படம் ரேஸிலிருந்து விலகியதா? யாருக்கு அதிக வரவேற்பு

விஜய் அட்லீ இயக்கத்தில் நடித்துள்ள பிகில் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்தது. வரும் அக்டோபர் மாத தீபாவளி ஸ்பெஷலாக இப்படம் வெளியாகவுள்ளது.

விஜய் அண்மையில் அப்படக்குழுவுக்கு கால் பவுன் தங்க மோதிரம் பரிசாக வழங்கினார். அவர் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளது உறுதியாகிவிட்டது.

இது ஒரு பக்கம் இருக்க பிகில் படத்துடன் தீபாவளி போட்டியில் தனுஷ் நடித்துள்ள பட்டாசு படமும், விஜய் சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் படமும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் படக்குழு இதனை மறுத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே போல தமிழகத்தின் 90 சதவீத திரையரங்குகள் பிகில் படத்தை திரையிட முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.