Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பெரும் வசூலை ஈட்டி மீண்டும் மாஸ் காட்டிய அஜித் - பாக்ஸ் ஆஃபிஸ் லிஸ்ட் இதோ

கடந்த ஆகஸ்ட் 08 ல் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சகர்கள் பலரும் படத்திற்கு நேர்மறையான விமர்சனமளித்து வாழ்த்தியுள்ளனர்.

பிங்க் என்ற ஹிந்தி படத்தின் ரீமேக் என்பது மட்டுமில்லாமல் அஜித் தற்போதை கால பெண்களின் பாதுகாப்பிற்காக சொல்லிய விசயங்கள் மக்களிடம் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.

10 நாட்களை கடந்து படம் இன்னும் தியேட்டர்களில் ஹவுஸ் புல்லாக தான் ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது இதன் வசூல் ரூ 150 கோடியை தாண்டியுள்ளது என சமூகவலைதளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

ஆனால் இதுவரை நேர்கொண்ட பார்வை படத்தின் மொத்த வசூல் ரூ 100 கோடி என்பதே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அப்ட்டேட்டின் படி ரூ 120 கோடி வசூல் என நம்பகமான செய்திகள் வெளியாகத்தொடங்கியுள்ளன.

அதே வேளையில் இவ்வருடம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வந்த விஸ்வாசம் படமும் நல்ல விமர்சனங்களையும் வரவேற்பையும் கொடுத்தது. இப்படத்தின் வசூல் ரூ 180 கோடி ஆனது.

இவ்வருடத்தில் மொத்தமாக என எடுத்துக்கொண்டால் வசூல் இரண்டையும் சேர்த்து ரூ 300 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. அப்படியாக பார்க்கையில் 4 மாத இடைவெளிக்கு பின் மீண்டும் அஜித் வெற்றிப்பாதையில் சென்றுள்ளார்.