Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அட்லீயுடன் போட்டி போட்டு டைட்டிலை வாங்கிய படக்குழுவினர்! மாஸான டைட்டில் யாருக்கு போனது தெரியுமா

தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து இயக்குனர் அட்லீ தற்போது விஜய்யை வைத்து பிகில் படத்தை இயக்கியுள்ளார். இவரின் படங்களில் பாடல்களும், வசனங்களும் அதிரடியாக இருக்கும்.

இதற்கு ரசிகர்கள் மத்தியில் தியேட்டரில் நல்ல வரவேற்பும் இருந்ததுண்டு. அந்த வகையில் மெர்சல் படத்தில் வந்த மாஸான வசனம் “நீ பற்ற வைத்த நெருப்பொன்று! பற்றி எரிய உனை கேட்கும்” என்பது.

நடிகர் அபிலாஷ் தற்போது பற்றிவைத்த நெருப்பொன்று படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார்.

இப்படத்திற்காக டைட்டில் தேர்வு செய்து சங்கத்தில் பதிவு செய்ய சென்ற போது ஏற்கனவே இந்த டைட்டில் பதிவாகிவிட்டது என கூறிவிட்டார்களாம்.

யார் என கேட்க இயக்குனர் அட்லீ என சொல்ல உடனே அவரிடம் பேசி டைட்டிலை தங்கள் படத்திற்கு பெற்றுவிட்டார்களாம். அட்லீயும் ஓகே சொல்லிவிட்டாராம்.