Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் படத்திற்கும் இதற்கும் தொடர்பில்லை! பிரஷர் கொடுத்ததா விஜய் தரப்பு? முன்னணி இயக்குனர் விளக்கம்

நடிகர் விஜய் தற்போது நடித்துள்ள பிகில் படத்தில் அவர் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நடித்துள்ளார். இதே போன்ற கதைக்களத்தில் கபடியை மையமாக கொண்டு சுசீந்திரன் இயக்கத்தில் கென்னடி கிளப் என்கிற படம் உருவாகியுள்ளது. இதில் சசிக்குமார், பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தற்போது சுசீந்திரன் அளித்துள்ள பேட்டியில் பிகில் படத்திற்கும் கென்னடி கிளப் படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறியுள்ளார். இது தொடர்பாக பிகில் படக்குழு எந்த பிரஷரும் கொடுக்கவில்லை என சுசீந்திரன் கூறியுள்ளார்.

இரண்டு படங்களும் எமோஷனலான ஸ்போர்ட்ஸ் படங்கள் என்பதை தவிர வேறு எந்த தொடர்பும் இல்லை என குறிப்பிட்டுள்ளார் சுசீந்திரன்.