Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யாவுடன் நேரடியாக மோதும் முக்கிய நடிகரின் படம்

சூர்யா நடித்துள்ள காப்பான் படம் அடுத்த மாதம் 20ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதை தொடர்ந்து அவர் தற்போது சூரரை போற்று படத்தில் நடித்து வருகிறார்.

இறுதிச்சுற்று புகழ் சுதா இந்த படத்தினை இயக்குகிறார். ஷூட்டிங் சென்னையில் நடந்துவரும் நிலையில் சூரரை போற்று இந்த வருட இறுதியில் கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக வெளியாகும் என கூறப்படுகிறது.

அதே தேதியில் தான் சிவகார்த்திகேயன் நடித்துவரும் ஹீரோ படம் ரிலீஸ் ஆகவுள்ளது. இரும்புத்திரை மித்ரன் இயக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்துவருகிறார்.

சூர்யா-சிவகார்த்திகேயன் இருவரும் மோதவுள்ள நிலையில், பாக்ஸ் ஆபிசில் ஜெயிக்கப்போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.