Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஹீரோவாகும் விக்ரமின் தங்கை மகன்! ஹீரோயின் இந்த பிக்பாஸ் பிரபலம் தானாம்

நடிகர் விக்ரமின் மகன் துருவ் ஆதித்யா வர்மா படத்தின் மூலம் ஹீரோவாகிவிட்டார். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிந்து விட்டது. இது பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது.

தற்போது விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜூமன் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை தாதா 87 படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ இயக்குகிறாராம்.

இப்படம் காமெடி கலந்த திரில்லர் கதை எனலாம். பொல்லாத உலகில் பயங்கர கேம் என்ற இப்படத்தில் அர்ஜூமனுக்கு ஜோடியாக பிக்பாஸ் சீசன் 2 பிரபலம் ஐஸ்வர்யா தத்தா நடிக்க சீசன் 1 ஜூலியும் இணைந்து நடிக்கிறார்கள்.

முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு திருச்சி, கோவாவிலும் நடைபெறவுள்ளதாம். காமெடி நடிகராக மொட்டை ராஜேந்திரனும் இப்படத்தில் நடிக்கிறார்.