Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Cineulagam Exclusive ! இளம் ஹீரோயினுடன் விஜய் சேதுபதியின் அடுத்த பிளான்! படத்தின் தற்போதைய நிலை

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு ஆஸ்திரேலியாவில் நடந்த இந்தியன் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் சிறந்த படத்திற்கான விருது அறிவிக்கப்பட்டது.

தற்போது கடைசி விவசாயி, சங்கத்தமிழன், லாபம், மாமனிதன் என பல படங்கள் கையில் இருக்கின்றன. அவர் தெலுங்கில் நடித்துள்ள சயீரா நரசிம்ம ரெட்டி படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளாது.

இதனையடுத்து அவரின் 33 வது படத்தில் அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். 13 நாட்கள் கொண்ட இதன் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது.

இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரு ஆகஸ்ட் 28 ல் தொடங்கவுள்ளது. அறிமுக இயக்குனர் வெங்கடேஷ் கிருஷ்ண ரோகந்த் படத்தை இயக்குகிறார். இப்படத்தில் எடிட்டராக சதீஷ் சூர்யா என்பவர் பணியாற்றுகிறார்.