Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் சினிமா விமர்சகர்களை கடுமையாக தாக்கி பேசிய எச்.வினோத்

நேர்கொண்ட பார்வை படம் ரிலீஸ் ஆகி பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை இயக்கிய எச்.வினோத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் இந்த படம் பற்றி விமர்சகர்கள் கூறியுள்ள கருத்து பற்றி எச்.வினோத் பேட்டி அளித்துள்ளார். யூடியூப்பில் விமர்சனம் செய்பவர்கள் தங்கள் பார்வையாளர்களை திருப்திப்படுத்தவே செயல்படுகிறார்கள்.

"படம் நல்லா இருக்கா.. இல்லையா என்பது அவர்களுக்கு இரண்டாவதுதான். அவர்களை பொறுத்தவரை அது ஒரு வீடியோ. அதை நான் விமர்சனமாக பார்ப்பதில்லை" என கூறியுள்ளார் அவர்.