Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கத்தி ஹிந்தி ரீமேக்கில் இருந்து விலகிய டாப் ஹீரோ

தமிழில் விஜய் நடிப்பில் சூப்பர்ஹிட் ஆன கத்தி படத்தினை தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யும் முயற்சிகள் நடந்து வருகிறது. அதில் நடிகர் அக்ஷய் குமார் தான் ஹீரோவாக நடிப்பார் என முன்பு தகவல் பரவியது.

ஆனால் தற்போது இந்த படத்தில் இருந்து அக்ஷய் குமார் விலகிவிட்டாராம்.

படத்தினை பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி தான் தயாரிக்கிறார் எனவும், அவர் புதிய படக்குழுவை தேர்வு செய்யவுள்ளார் எனவும் கூறப்படுகிறது.

மேலும் அக்ஷய் நடித்தால் ரவுடி ரத்தோர் 2 தான் இந்த படத்தின் டைட்டில் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அக்ஷய் விலகிவிட்டதால் படத்தின் தலைப்பும் மாறவுள்ளது.