Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பட்ஜெட் ரூ 2 கோடி தான்! கனமழையிலும் தாறுமாறான வசூல் சாதனை - எத்தனை கோடி தெரியுமா?

பல கோடிகளை கொட்டி படம் எடுத்து அது திரைக்கு வந்து போட்ட பணத்தை எடுப்பதற்குள் தயாரிப்பாளரின் பாடு திண்டாட்டம் தான். அதே வேளையில் சின்ன பட்ஜெட் படங்களும் பெரும் வசூலை ஈட்டுகின்றன.பெரியளவில் விளம்பரங்களும் கிடையாது. நல்ல கதை மக்களிடம் அதிகம் இடம் பிடிக்கும் என்பது நிரூபணமாகிறது.

அண்மையில் மலையாளத்தில் ரூ 2 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வெளியான படம் தண்ணீர் மாதன் தினங்கள். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் வந்த இப்படத்தில் வினித் ஸ்ரீனிவாசன் மட்டுமே முகம் தெரிந்த நடிகர்.

மற்றவர்கள் புதுமுகங்களே. கேரளாவில் வந்த கனமழை காலத்திலும் படம் நல்ல வரவேற்பை பெற்று ரூ 45 கோடி சம்பாதித்துள்ளது. இதனை பலரையும் பாராட்டியுள்ளனர்.